Friday, March 30, 2012

பெற்றோரை நேசி

பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?


பாசம் கொட்டி வளர்த்த பெற்றோரை அவர்களின் முதிர்வயதில் கண்டு கொள்ளாமல் போகும் பிள்ளைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். `சேச்சே… நானெல்லாம் அப்படி இல்லை. என் பெற்றோர் தான் என் உயிர்’ என்று உங்களில் பலர் சொல்லக்கூடும்.

... அப்படியானால் நீங்கள் பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

பணி ஓய்வு, நோய் அவர்களில் ஒருவர் மரணம் போன்ற பிரச்சினையான கால கட்டங்களில் நான் என் பெற்றோருக்குத் துணையாக நிற்பேன்.

என் பெற்றோர் இளவயது வரையிலும் வேண்டியமட்டும் என்னை கவனித்தார்கள். இப்போது இது என் முறை. நான்தான் அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களின் தேவையறிந்து நான் செயல்படுவேன்.

அவர்கள் இதுவரை செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுடன் இருப்பேன்.

அவர்களோடு நான் அதிக நேரம் செலவிடுவேன். அவர்களுக்கு நான் தரும் உணவில் என் அன்பும் கலந்திருக்கும்.

என் மழலைப்பருவம், குழந்தைப்பருவம், இளம் பருவங்களில் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் என்னைப் படிப்படியாக அழைத்துச் சென்றதை நினைவில் வைத்து, அவர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று வருவேன்.

மேற்சொன்ன அத்தனையையும் இதய சுத்தியோடு நீங்கள் சொல்லியிருந்தால் பெற்றோரின் தங்கமான பிள்ளை நீங்கள் தான்.

சிலர் தங்கள் பெற்றோரை பூவாகத் தாங்குகிறோம் என்பார்கள். அவர்கள் சொன்னதை நம்பி வீட்டில்போய் பார்த்தால் பெற்றோர் வீட்டின் உள் இருட்டறையில் அழுக்குக் கட்டிலில் கிழிந்த நாராய் கிடப்பார்கள்.

இதுவா கவனிக்கிற லட்சணம்? நேசிக்கிற லட்சணம்?

பெற்றோரை முதிர்வயதில் தள்ளி விடாதே என்கிறது, பைபிள்.

நிஜமாகவே பெற்றோரை நேசிப்பவர்கள்பின்வரும் 6 கேள்விகளுக்கு ஆம்- இல்லை பதிலளிக்கலாம்.

1. வயதான பெற்றோர் ஆலோசனைகளும் அறிவுரைகளும் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது? (ஆம் / இல்லை)

2. வயதாகி விட்டதால் பெற்றோர் எரிச்சலூட்டு பவராகவும் மனச்சோர்வு அடைபவராகவும் உள்ளனர். இப்படிப்பட்ட நடத்தையை நான் புரிந்துகொண்டு அவர்களை அனுசரித்துப் பாகிறேன்.. (ஆம் / இல்லை)

3. நான் வளரும்போது எனக்கான தேவைகளை என் பெற்றார் தீர்மானிக்கிறார்கள். நான் வளர்ந்த பிறகு எனது விருப்பங்களை நானே முடிவு செய்கிறேன். சில சமயங்களில் மட்டும் அவர்களிடம் ஆலோசிக்கிறேன். (ஆம் / இல்லை)

4. எனக்கு வேலைகள் அதிகமாக இருந்தாலும், என் பெற்றோருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுடைய எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்கிறேன். (ஆம் / இல்லை)

5. எனக்கு மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். (ஆம் / இல்லை)

6. என் பெற்றோரை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்துகிறேனா? (ஆம் / இல்லை)

7. என் வாழ்க்கைத் துணையை தேட என் பெற்றோர் உதவுவதாகக் கூறினால், நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறி விடுவேன். (ஆம் / இல்லை)

8. என்னைப் போலவே என் லைப் பார்ட்னரும் என் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்வேன். (ஆம் / இல்லை)

9. பெற்றோருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எரிச்சலாவேன். (ஆம் / இல்லை)

10. குழந்தைகளை வளர்ப்பது விஷயமாய் என் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்கிறேன். (ஆம் / இல்லை)

இப்போது நீங்கள்விடை சொல்லும் நேரம். விடை எழுதும்போதே நான் என் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். குறைகள் உங்கள் பக்கம் இருந்தால் இப்போதே அதை மாற்றிக்கொண்டு பெற்றோருக்கு அன்பான பிள்ளைகளாக இருக்க தீர்மானியுங்கள்.
 இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது

தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.

அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.

‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்

பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்
தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்.
ஆனந்தம் என்பது எது தெரியுமா

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்

வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை
அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.

1 comment:

  1. Top Casino Sites in Indonesia
    With 카지노사이트 the ambition to be the best online casino หาเงินออนไลน์ for you, there is no better place to spend your money than at an online 제왕 카지노 casino site. We've compiled a list

    ReplyDelete