Kutty Dhinushan Balaji

Tuesday, September 29, 2015

திருப்பதி பிரம்மோற்சவம்



 
இந்தியத் திருநாட்டிலேயே மிகப் பிரபலமானதும் செல்வச் செழிப்பு கொண்டதுமான திருக்கோயில் திருமலைதான். 
 
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டத்தில் இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநில பக்தர்களையும் ஒருங்கே ஈர்க்கக்கூடிய ஒரு பெரிய புகழ் பெற்ற திருத்தலமாக இது திகழ்கிறது. 
 
ஏன் மேனாட்டினரையும் பக்தர்களாகக் கொண்ட தலம் இது! 
 
புரட்டாசி மாதம் என்றாலேயே திருமலையில் அற்புதத் திருவிழாதான். 
 
18.9.2015  வெள்ளிக்கிழமை அன்று பிறந்த புரட்டாசி மாதத்திலிருந்து அந்த உற்சவ உற்சாகத்தை அனுபவிக்க இப்போதே சில முன்னோடித் தகவல்கள்:
 
 
ஏழு மலைகள்: 
சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாச்சலம், விருஷபாசலம், நாராயணசலம், வெங்கடாசலம் என ஏழு மலைகளைக்  கொண்டதால் சப்தகிரி என்பர். 
 
சங்கம் மருவிய இலக்கியம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இத்தலத்தை ‘நெடியோன் குன்றம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
திருவிழா: 
 
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வருடம் முழுதும் திருவிழா என்றாலும் சிறப்பு விழா புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தான். 
 
இவ்விழாவை பிரம்மனே நேரில் வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம். 
 
பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வெங்கடாஜல மகாத்மியத்தின் 14ம் அத்தியாயத்தில் திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி தனக்கு உற்சவம் நடத்தி வைக்க ஆணையிட்டார். 
 
அதன்படி பிரம்மன் நடத்துவதுதான் இவ்விழா. இறைவன் கட்டளையை ஏற்று அதை தொண்டைமான் அரசனிடம் கூற பின் இருவரும் தேவ சிற்பியான விஸ்வகர்மா உதவியுடன் உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாட வெண் கொற்றக்குடை, சாமரம், ஆலவட்டம், பற்பல வாகனங்கள், திருத்தேர் போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். 
 
 
புரட்டாசி திருவோணம்: 
 
இந்நாள்தான் ஏழுமலையானின் அவதாரத் திருநாள். 
 
திருவோணத்திற்கு 9 நாட்களுக்கு முன்பாக நடைபெறும் திருவிழாதான் திருப்பதி பிரம்மோற்சவம். 
 
இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் பூரண ஆபரண அலங்காரங்களுடன் வீதியுலா வருவார். 
 
கி.பி. 66ல் இங்கு ஒருமுறை பிரம்மோற்சவம் நடந்தது என்றும், அதன்பின் புரட்டாசி மாதம் ஒருமுறையும், மார்கழி மாதம் ஒரு முறையும் இரு பிரம்மோற்சவங்கள் நடந்துள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டில் காணலாம்.
 
 
பிரம்மோற்சவம்: 
 
பவித்ரோற்சவம் என்றால் புனிதப்படுத்துதல் என்று பெயர். 
 
அங்கு ரார்ப்பணம் செய்தபின் முதல் நாள் காலை கொடியேற்றம், மாலை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். 
 
2ம் நாள் சிறிய சேஷ வாகனம், ஹம்ஸ வாகனம். 
 
3ம் நாள் சிம்ம வாகனம், முத்துப் பந்தல் வாகனம். 
 
4ம் நாள் கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், 
 
5ம் நாள் காலை மோகினி அவதாரம், மாலை கருட சேவை. 
 
இது மிகவும் சிறப்பான விழா. 
 
இதில் முக்கிய சிறப்புகள் உள்ளன. 
 
6ம் நாள் அனுமன் வாகனம், யானை வாகனம், 
 
7ம் நாள் சூரிய பிரபை, சந்திர பிரபை. 
 
8ம் நாள் காலை தேரோட்டம். மாலை குதிரை வாகனம், 
 
9ம் நாள் காலை சக்ரஸ்நானம், தீர்த்தவாரி, மாலை கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவடையும். 
 
விழாவின் 5ம் நாள் உற்சவம், கருட சேவையாகும் இது 3 சிறப்புகளைக் கொண்டது: மூலவர் ஆபரணங்கள், ஆண்டாள் மாலை, குடைகள்.
 
 
மூலவர் ஆபரணம்: 
 
கருட சேவையன்று உற்சவருக்கு மூலவர் அணியும் அனைத்து ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். 
 
இவரை தரிசித்தால் மூலவரையே தரிசித்தது போலாகும் என்பர். 
 
பிரபலமான ஆபரணமான சாளக்கிராம தங்க மாலையும், லட்சுமி உருவம் பதித்த 108 தங்கக் காசுகளால் ஆன காசு மாலையை அணிவிப்பார்கள்.
 
ஆண்டாள் மாலை: 
 
ஆண்டாள் கண்ணனை திருமணம் செய்துகொள்ள மதுரை கள்ளழகரையும் வேண்டிக் கொண்டாள். 
 
அதனால் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவ 5ம் நாள் கருட சேவையன்று திருப்பதி, ஏழுமலையானுக்கும் ஆண்டாள் மாலையை ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து அனுப்பி வைப்பார்கள். 
 
கருட சேவையில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் மாலையை அணிந்த பின்பே சுவாமி உலா வருவார். 
 
இத்துடன் ஆண்டாளின் பட்டுப் புடவையும் கிளியும் சேர்ந்துகொள்ளும்.
 
 
குடைகள்: 
 
சென்னையில் சேவார்தி குடும்பத்தினர் ஆண்டு தோறும் திருப்பதிக்கு 2 பெரிய குடைகளும், 4 சிறிய குடைகளும் அனுப்பி வைப்பார்கள். 
 
பட்டுடை, கைத்தடி, மான் தோல், மாங்கல்யம் யாவையும் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து அத்துடன் குடைகளையும் பாத யாத்திரையாக திருப்பதிக்கு எடுத்துச் செல்வர். 
 
வழி யெங்கும் மண்டகப்படியும் நடத்துவார்கள். 
கருட சேவை நாளுக்குள் இவை திருப்பதி வந்தடையும். 
 
இக்குடைகளுடனேயே கருட சேவை நடைபெறும். பிரம்மோற்சவத்தில் மட்டும்தான் மூலவருக்கும் உற்சவருக்கும் விசேஷமான மாலைகளைச் சமர்ப்பிப்பார்கள்.
 
 
விசேஷ பூஜை: 
 
ஆலயம், ஆலயம் சார்ந்தோர், பக்தர்கள் என எல்லோரையும் பரிசுத்தமாகவே பவித்ரோற்சவம் செய்கின்றனர். 
 
பூஜை முறை, மந்திர உச்சரிப்பில்  தவறு, தோஷம் இவற்றையும், கோயிலுக்கு வருவோர் குணநலன், தீட்டு, வழிபாட்டு முறை தவறு இவற்றையும் போக்கி இறையம்சத்தை பூர்ணமாக்கவே இந்த உற்சவம் செய்கின்றனர். இதுவே இந்த உற்சவத்தின் நோக்கம்.
 
 
ரக்ஷாபந்தன்: 
 
உற்சவ காலங்களில் உற்சவ மூர்த்திக்கு மட்டுமே இதைக் கட்டுவர். 
 
ஆனால், பவித்ரோத்சவத்தில் மூலவருக்கும் உற்சவருக்கும் கட்டுவர். 
 
இதனால் பகவானே நேரடியாக இந்த உற்சவத்தை அனுஷ்டிப்பதாகக் கருதுகின்றனர். 
 
ரக்ஷாபந்தன் கட்டியபின் மூலவரின் ஸாந்நித்யத்தை உற்சவருக்கு ஆவாஹனம் செய்வார்கள். 
 
அதன்பின் யாக சாலைக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். 
 
 
பின் பூஜைகள் நடக்கும். 
 
இப்பூஜைக்கு கணக்கும் உண்டு. 
 
ஆண்டுக்கு தினக்கணக்கில் 365 முறை செய்ய வேண்டும். 
 
சிலர் 180 முறையும், 90 முறையும் அல்லது மாதம் ஒன்று என 12 முறையும் இந்த பூஜை ஆராதனைகளைச் செய்வர். 
 
பவித்ரோற்சவத்தில் குறைந்தபட்சம் 12 முறையாவது இப்பூஜையை கண்டிப்பாக செய்ய வேண்டும். 
 
இதுவே இந்த உற்சவத்தின் முக்கிய நோக்கமாகும். 
 
 
பவித்ரோற்சவ நிறைவு நாள்: 
 
பூஜையன்று துவார தேவதாவிஸர்ஜனமும், மண்டல விஸர்ஜனமும் செய்தபின் மண்டல கர்ணத்தை உற்சவ மூர்த்தி திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள். 
 
இந்த உற்சவத்தை காண்போர் நிகரில்லா பெரும்பயனடைவர். 
 
 
திருப்பதி தரிசன சம்பிரதாயம்: 
 
203 பாசுரங்கள் பெற்றது திருப்பதி. இது 3 பிரிவுகள் கொண்டது. 
 
கீழ்க் காணும் வரிசையில் தரிசிப்பதுதான் சம்பிர தாயம். 
 
முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளையும் அடுத்து திருச்சானூரில் அலர்மேல் மங்கைத் தாயாரையும் பின் மேல் திருப்பதியில் சுவாமி புஷ்கரணியருகேயுள்ள வராஹரையும் தரிசித்த பின்பே மூலவர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வேண்டும்.
 
 
கோயில் அமைப்பு: 
 
முதல் வாயிலை படிக்கரவலி என்பர். கோபுரத்தை அழகு செய்யும் வாசல் இது. 
 
முதற்பிராகாரத்தை கடந்தால் வெள்ளி வாயில், அதன்பின் தங்க விமானத்தில் விமான வெங்கடேசரை தரிசிக்கலாம். 
 
பின் துவாரபாலகர்களை தரிசித்து உத்தரவு பெற்றபின் கருவறைக்குச் செல்லலாம். 
 
முதலில் சாதாரணமாகக் கட்டப்பட்ட இந்த அனந்தபுரமான திருப்பதி, 13ம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. 
Posted by kuttybalaji at 6:10 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, September 28, 2015

Kutty Balaji



Posted by kuttybalaji at 7:11 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, August 30, 2014

குன்றக்குடி சுற்றுலா போட்டோ
Posted by kuttybalaji at 7:11 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, August 23, 2014

DHINUSHAN BALAJI PHOTOS




























Posted by kuttybalaji at 10:52 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, July 29, 2014

தீப வழிபாட்டின் முறைகளூம் பயன்களும்





குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இதன் அடிப்பக்கம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகா விஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் நாதம், திரி பிந்து, சுடர் அலை மகள், கலைமகள்,தீ மலைமகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்துவிளக்கு என்பர்.

    இந்த விளக்கை மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும். பஞ்சுத் திரி தான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. குத்துவிளக்கின் ஜந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும்.

    குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு,திங்கள்,வியாழன்,சனி ஆகிய கிழமைகளில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.திங்கள் நடுஇரவு முதல் புதன் நடுஇரவு வரை தன குபேர தாட்சாயணியும், குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    எனவே இந்த நாட்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள் விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவாதல் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள் என்பதும் பரவலான நம்பிக்கை.

    ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும். வியாழன் அன்று தீபமேற்றினால் ’குருவின் பார்வையும் அது தரும் கோடி நன்மையும்’ நமக்கே கிடைக்கும்.

    வாகன விபத்துக்களைத் தவிர்க்க சனியன்று விளக்குத் துலக்கி தீபம் ஏற்றலாம். மற்ற நாட்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம். விளக்குத் துலக்காத நாட்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால், விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

   விளக்கில்லாத கோவிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பட வேண்டிய ஒன்று.தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும். வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.

   பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னிர் சேர்த்துக் தடவிக் காய வைத்து, அதைத் திரியாக்கி வடக்கு முகமாக வைத்து,’’’ ‘பஞ்ச தீப’ எண்ணெய் ஊற்றித் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
                             
Posted by kuttybalaji at 10:42 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, October 18, 2013

தமிழ் மருத்துவம்

கல்லீரல் காவலன்

ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம்


பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.


.

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.

மருத்துவ குணங்கள்:

இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக்
கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய
நோய்களை எளிதில் போக்கும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.

பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.
Posted by kuttybalaji at 5:14 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 9, 2013

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
Posted by kuttybalaji at 5:18 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

World Counter

Flag Counter

About Me

kuttybalaji
View my complete profile

Blog Archive

  • ▼  2021 (1)
    • ▼  November (1)
      • பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !  ...
  • ►  2015 (2)
    • ►  September (2)
  • ►  2014 (3)
    • ►  August (2)
    • ►  July (1)
  • ►  2013 (4)
    • ►  October (2)
    • ►  January (2)
  • ►  2012 (19)
    • ►  December (3)
    • ►  October (2)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  March (7)
    • ►  February (1)
Travel theme. Powered by Blogger.